5 கிலோ உருளை கிழங்கு வேணுமாம் : கோடிங் வார்தையில் சிக்கிய உ.பி., எஸ்.ஐ.,
5 கிலோ உருளை கிழங்கு வேணுமாம் : கோடிங் வார்தையில் சிக்கிய உ.பி., எஸ்.ஐ.,
ADDED : ஆக 10, 2024 07:09 PM

லக்னோ: வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்காக கோடிங் வேர்டாக 5 கிலோ உருளை கிழங்கு என்ற பெயரில் லஞ்சம் கேட்ட உ.பி., சப் -இன்ஸ் பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
உ.பி., மாநிலத்தில் சவுரிக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவல்பூர் சபுன்னா சவுக்கி என்ற போலீஸ் ஸ்டேஷனில் சப் -இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராம் கிரிபால்சிங். இவர் விவசாயி ஒருவரிடம் வழக்கு ஒன்றில் இருந்து விடுவிப்பதற்காக லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சத்தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.
இருப்பினும் கோடிங் வார்த்தையாக 5 கிலோ உருளை கிழங்கு என்று குறிப்பிடுகிறார். அதற்கு விவசாயி ஒப்புக்கொள்ளாமல் 2 கிலோ உருளை கிழங்கு தருகிறேன் என்கிறார். ஒரு வழியாக ஒப்பந்தம் இறுதியாகி இரு தரப்பும் 3 கிலோ உருளைகிழங்கை தரவும், பெற்றுக்கொள்ளவும் சம்மதிக்கின்றனர். இந்த ஒப்பந்த பேச்சு வார்த்தை அனைத்தும் ஆடியோவாக வைரலாகி உள்ளது.
இந்த ஆடியோ குறித்து கன்னோஜ் எஸ்.பி., அமித்குமார் கூறுகையில் சப்-இன்ஸ் பெக்டர் ராம்கிரிபால் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் லஞ்ச பணத்தை பங்கிட்டுகொள்வது குறித்து போலீசாரிடையே நடைபெற்ற ஆடியோ உரையாடல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

