மெட்ரோ ரயில் பயண டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதம் சலுகை
மெட்ரோ ரயில் பயண டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதம் சலுகை
ADDED : செப் 17, 2024 04:44 AM
பெங்களூரு : மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு, ஐந்து சதவீதம் சலுகையை, நம்ம மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு நம்ம மெட்ரோ ரயிலில், நாள் தோறும் பயணிப்போரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உணர்ந்த நம்ம மெட்ரோ ரயில் நிர்வாகம், 'கியூ ஆர் கோடு' மூலம் டிக்கெட் முன் பதிவு செய்வோருக்கு, டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி என்ற சலுகையை அறிவித்து உள்ளது.
இதனால் டிக்கெட் வாங்க கவுன்டரில் வரிசையில் நிற்க தேவையில்லை. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கியூ ஆர் கோடு ஸ்கேனர் வைக்கப்பட்டு உள்ளன. இதை ஸ்கேன் செய்தால், உங்களின் வாட்ஸாப் எண்ணுக்கு மெட்ரோவில் இருந்து தகவல் வரும்.
அதில், 'ஹாய்' என டைப் செய்து, அனுப்ப வேண்டும். அதன்பின், கன்னடம் அல்லது ஆங்கிலம் என எந்த மொழியில் தகவல் வேண்டும் என கேட்கும். நமக்கு வேண்டிய மொழியை தேர்வு செய்து அனுப்பினால், கியூ ஆர் டிக்கெட் கிடைக்கும்.

