sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாநகராட்சிக்கு ரூ.5,200 கோடி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்

/

மாநகராட்சிக்கு ரூ.5,200 கோடி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்

மாநகராட்சிக்கு ரூ.5,200 கோடி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்

மாநகராட்சிக்கு ரூ.5,200 கோடி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்


ADDED : ஆக 02, 2024 01:13 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்ரம் நகர்,:“நகரின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக எம்.சி.டி-., எனும் டில்லி மாநகராட்சிக்கு 5,200 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதப்படும்,” என, மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறினார்.

நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஹரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நகரங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசிடமிருந்து மானியங்களைப் பெறுகின்றன.

வடிகால், சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த எம்.சி.டி-.,க்கு மானியங்கள் தேவை.

மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போலவே எம்.சி.டி-.,யும் மத்திய அரசிடம் இருந்து மானியங்களைப் பெற வேண்டும். மாநகராட்சிக்கு 5,200 கோடி ரூபாய் வழங்கக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us