10 ஆண்டுகளில் 5,297 பண மோசடி வழக்குகள் : அமலாக்கத்துறை அறிக்கை
10 ஆண்டுகளில் 5,297 பண மோசடி வழக்குகள் : அமலாக்கத்துறை அறிக்கை
ADDED : ஆக 07, 2024 09:01 PM

புதுடில்லி: கடந்த பத்து ஆண்டுகளில் 5,297 பண மோசடி தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளதாக பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடு முழுதும் கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாதத்திற்கு எதிராக தடுப்பு காவல் சட்டத்தின் கீழும், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழும் 8719 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் யு.ஏ.பி.ஏ. எனப்படும் சட்டவிரோத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 789 வழக்குகளில் 222 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டும், 567 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் பி.எம்.எல்.ஏ. எனப்படும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 5,297 வழக்குகள் பதியப்பட்டு, 43 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டும், 40 வழக்குகளில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
2019-2020 கோவிட் தொற்று காலத்தில் 708 ஆக அதிகரித்தது. அதிகபட்சமாக 2021ம் ஆண்டில் 1,166, 2022ம் ஆண்டில்1,074 வழக்குகள் பதியப்பட்டன. 2023-24 ம் ஆண்டுகளில் 397 வழக்குகள் பதிவாகின.
மாநிலங்களில் அதிபட்சமாக மஹாராஷ்டிராவில் 43 ,மேற்குவங்கத்தில் 42 , ராஜஸ்தானில் 24 வழக்குகள் பதியப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.