ADDED : மே 02, 2024 06:24 AM

பீதர்: லோக்சபா தொகுதியில், பீதர் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக பகவந்த் கூபா, காங்கிரஸ் வேட்பாளராக சாகர் கான்ட்ரே உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் வாக்காளர்களுக்கு பல வாக்குறுதிகளை கூறி, ஓட்டு சேகரிக்கின்றனர்.
இந்த தொகுதியில், ராமவிலாஸ் ராமுலாலாஜி என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவரும் வாக்காளர்களை ஈர்க்க, பல்வேறு வாக்குறுதிகளை கூறுகிறார். பீதரில் நேற்று அவர் கூறியதாவது:
நான் வெற்றி பெற்றால், தொகுதியில் தரமான சாலை அமைப்பேன். விவசாயிகளுக்கு மாதந்தோறும் 2,000 ருபாய் வழங்கப்படும். படித்து, வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை உட்பட, பல திட்டங்களை செயல்படுத்துவேன்.
தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.,வால், மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மாற்றங்களை விரும்புகின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் வேட்பாளர்களை, வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நான் வெற்றி பெற்றால், எனக்கு கிடைக்கும் மாத ஊதியத்தில் 5,000 ரூபாய் மட்டும் பயன்படுத்துவேன். மிச்ச பணத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவேன். அரசின் உதவியுடன், ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்களை, இலவசமாக வழங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

