ADDED : ஏப் 27, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்பங்காபீஹார் மாநிலம், தர்பங்கா மாவட்டம், பஹீரா பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வீட்டில் திருமண விழா நடந்தது. இதற்காக பந்தல் போடப்பட்டிருந்தது.
அதன் அருகே சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். இதில் பந்தலில் தீ பிடித்து, அந்த வீடு முழுதும் தீ வேகமாக பரவியது.
நீண்ட நேர போராட்டத்துக்கு பின், தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இருப்பினும், பந்தலின் உள்ளே சிக்கிய இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக பலியாகினர். சில கால்நடைகளும் இந்த தீ விபத்தில் இறந்தன.

