கொடுமைக்கு முடிவே இல்லையா: 6 வயது சிறுமிக்கு துன்புறுத்தல்; பள்ளி ஊழியர் கைது
கொடுமைக்கு முடிவே இல்லையா: 6 வயது சிறுமிக்கு துன்புறுத்தல்; பள்ளி ஊழியர் கைது
UPDATED : செப் 05, 2024 07:04 AM
ADDED : செப் 05, 2024 06:49 AM

நொய்டா: உத்தரபிரதேசத்தில் தனியார் பள்ளியில் பயிலும் 6 வயது சிறுமியை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
வலுக்கும் குரல்
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. குறிப்பாக, கோல்கட்டா சம்பவத்தை தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நேற்று முன்தினம் (செப்.,03) வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவி, மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
புகார்
அப்போது, பள்ளியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பயந்து போன சிறுமி இது தொடர்பாக தனது பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளார். அதன்பேரில், போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
கைது
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளி ஊழியரை கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து சிறுமி, பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.