மனைவிக்கு 6வது டெலிவரி... செலவுக்கு மகனை விற்க முயற்சி; தந்தை உட்பட 5 பேர் கைது
மனைவிக்கு 6வது டெலிவரி... செலவுக்கு மகனை விற்க முயற்சி; தந்தை உட்பட 5 பேர் கைது
ADDED : செப் 08, 2024 08:12 AM

லக்னோ : உத்தரபிரதேசத்தில் மருத்துவமனை சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த முடியாத நபர், தன் 3 வயது மகனை விற்க முயன்றார். இது தொடர்பாக, தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரசவம்
உ.பி., பர்வா பாட்டியைச் சேர்ந்த ஹரீஸ் படேல் என்பவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கும் நிலையில், அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் 6வது குழந்தை பிறந்துள்ளது. தினக் கூலி தொழிலாளியான ஹரீஸ் படேலால், மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவரது மனைவியையும், குழந்தையையும் மருத்துவமனையில் இருந்து அனுப்ப மருத்துவ ஊழியர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.
விற்பனை
என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்த அவரிடம், 3 வயது மகனை விற்பனை செய்தால், மருத்துவமனையின் சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை செலுத்தி விடலாம் என்று அங்கிருந்தவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். வேறுவழியில்லாமல் குழந்தையை விற்க ஹரீஸ் படேலும் சம்மதித்துள்ளார்.
கைது
இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், தரகர் அமரீஸ் யாதவ், குழந்தையை தத்தெடுக்க முயன்ற தம்பதிகள் போலா யாதவ் - கலாவதி, போலி மருத்துவர் தாரா குஷ்வாஹா, மருத்துவமனை உதவியாளர் சுகந்தி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.