ADDED : ஏப் 03, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்ரபதி சாம்பாஜி நகர்: மஹாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகரின் கன்டோன்மென்ட் பகுதியில், 'டானா பஜார்' என்ற வர்த்தக வளாகம் உள்ளது.
இந்த வளாகத்தின் தரை தளத்தில் தையல் கடை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
இதன் மாடியில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. நேற்று அதிகாலை 4:00 மணியளவில் தையல் கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென முதல் மாடிக்கும் பரவியது.
இது பற்றி அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசாருடன் இணைந்து தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் மாடியில் துாங்கிக்கொண்டிருந்த அசிம் ஷேக், 3, பாரி ஷேக், 2, ஆகிய இரு குழந்தைகள், மூன்று பெண்கள் மற்றும் இரு ஆண்கள் என ஏழு பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

