ADDED : செப் 07, 2024 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா:புதுடில்லி அருகே நொய்டாவில் கனமழையால் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 7 பேர் காயம் அடைந்தனர்
உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டம் நொய்டாவில் நேற்று கனமழை கொட்டியது. சோலாஸ் கிராமத்தில் சைப் அலி வீட்டின் கூரை இடிந்து சயிப் அலி,34, ஷகிலா,50, ஷாஹித்,34, ஷான்,8, சோஹன்,4, தைமூர்,3, அலி கான்,2 ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
தகவல் அறிந்து போலீஸ் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் வந்து இடிபாட்டில் சிக்கித் தவித்த் 7 பேரையும் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் நான்கு பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.