sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

7,000 சி.பி.ஐ., வழக்குகள் நீதிமன்றத்தில் தேக்கம் விஜிலென்ஸ் கமிஷன் தகவல்

/

7,000 சி.பி.ஐ., வழக்குகள் நீதிமன்றத்தில் தேக்கம் விஜிலென்ஸ் கமிஷன் தகவல்

7,000 சி.பி.ஐ., வழக்குகள் நீதிமன்றத்தில் தேக்கம் விஜிலென்ஸ் கமிஷன் தகவல்

7,000 சி.பி.ஐ., வழக்குகள் நீதிமன்றத்தில் தேக்கம் விஜிலென்ஸ் கமிஷன் தகவல்


ADDED : செப் 03, 2024 12:00 AM

Google News

ADDED : செப் 03, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,: 'சி.பி.ஐ., விசாரிக்கும் 6,903 ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன; இவற்றில், 361 வழக்குகள் 20 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளன' என மத்திய விஜிலென்ஸ் கமிஷன் தெரிவித்துள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பான மத்திய விஜிலென்ஸ் கமிஷன், கடந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த டிச., 31ம் தேதி நிலவரப்படி, சி.பி.ஐ., விசாரிக்கும் 6,903 ஊழல் வழக்குகள் நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில், 361 வழக்குகள் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

மொத்தமுள்ள வழக்குகளில் 2,100 வழக்குகள் 20 ஆண்டுகளாகவும், 2,188 வழக்குகள் 10 ஆண்டுகளாகவும், 875 வழக்குகள் ஐந்து ஆண்டுகளாவும் நிலுவையில் உள்ளன. 1,379 வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

அதேபோல், 658 வழக்குகள் சி.பி.ஐ., விசாரணை அளவில் நிலுவையில் உள்ளன.

இதில் 48 வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவும், 74 வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும், 75 வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும், 175 வழக்குகள் ஓராண்டுக்கு மேலாகவும் உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும், 286 வழக்குகள் விசாரணையில் உள்ளன.

கடந்த ஆண்டில் மட்டும் 876 வழக்குகள் சி.பி.ஐ.,யால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், நீதிமன்ற உத்தரவின் பேரில் 91 வழக்குகளும், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் புகாரின் அடிப்படையில், 84 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

கடந்தாண்டு மட்டும் 676 அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 552 வழக்குகள் சி.பி.ஐ., தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 873 வழக்கு விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுஉள்ளன.

இதேபோல், கடந்த ஆண்டில் 636 வழக்குகளில் நீதிமன்றங்களால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், 411 வழக்குகளில் தண்டனைகள் வழங்கப்பட்டன; 140 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். பல்வேறு காரணங்களால், 85 வழக்குகள் கைவிடப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us