ADDED : ஜூலை 05, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னாட் பிளேஸ்:மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 713 வடிகால்களை துார்வாரும் பணி நிறைவு பெற்றதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 80,690 டன் வண்டல் மண் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழையை முன்னிட்டு தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வடிகால்களை துார்வாரும் பணியை டில்லி மாநகராட்சி துவக்கியது. முதற்கட்டமாக 466 கி.மீ., நீளத்திற்கு வடிகால்கள் துார்வாரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதாவது, 713 வடிகால்களில் இருந்து 80,690 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வடிகாலிலும் நான்கு அடி முதல் அதற்கு மேற்பட்ட ஆழம் வரை துார்வாரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.