ADDED : செப் 13, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்து 850 ரூபாய் கோடிக்கான ஆர்டரை, பெல் நிறுவனம் பெற்று உள்ளது.
பெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
கடற்படை கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும், வான்வழி இலக்குகளை கண்டறிந்து கண்காணிப்பதற்காகவும், கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மற்றும் பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, முழுமையான உள்நாட்டு ரேடார்கள் தேவைப்படுகிறது.
இந்த ரேடார்களை வழங்க, கொச்சி கப்பல் கட்டும் தளத்திடம் இருந்து, பெல் நிறுவனம் 850 கோடி ரூபாய்க்கு ஆர்டர் பெற்று உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.