sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின்னல் தாக்கி 10 ஆண்டுகளில் 850 பேர் பலி

/

மின்னல் தாக்கி 10 ஆண்டுகளில் 850 பேர் பலி

மின்னல் தாக்கி 10 ஆண்டுகளில் 850 பேர் பலி

மின்னல் தாக்கி 10 ஆண்டுகளில் 850 பேர் பலி


ADDED : மே 11, 2024 06:47 AM

Google News

ADDED : மே 11, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் மின்னல் தாக்கி கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 850 பேர் பலியாகி உள்ளனர். இதை தவிர்க்கும் வகையில், கர்நாடக மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய வழிமுறைகளை கூறியுள்ளது.

உலகளாவிய கால நிலைமாற்றம், புவி வெப்பமயமாதல், நீர் நிலைகளின் வீழ்ச்சி, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவை மேகங்கள் மோதலால் மின்னல் தீவிரமடைய முக்கிய காரணமாக அமைகின்றன.

விவசாயம், மாடு மேய்ப்பவர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் மின்னல் தாக்குதலுக்கு அதிகம் பலியாகின்றனர். கர்நாடகாவில் மழைக்காலத்திற்கு முன் மற்றும் மழைக்காலத்தின் தொடக்கத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 95 சதவீதம் மின்னல் தாக்கும்.

கர்நாடகாவில் 2020 - 2023 வரை 9 லட்சத்து, 80 ஆயிரத்து, 169 முறை மின்னல் தாக்குதல் நடந்துள்ளன.

அதேநேரத்தில், 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2 லட்சத்து, 5 ஆயிரத்து, 25 மின்னல் தாக்குதல் நடந்துள்ளன. அதிகபட்சமாக மே மாதத்தில் 21 முறை மின்னல் தாக்குதல் நடத்துள்ளது.

மின்னல் தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில், மித்ரா ஹெல்ப் லைன் உள்ளது.

மத்திய அரசின், 'தமனி' மின்னல் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், மின்னல் தாக்குதலை 40 நிமிடங்களுக்கு முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

 வீட்டை சுற்றி உள்ள காய்ந்த செடிகள், மரங்களை அழித்தல் மழையில் வெளியே செல்வதை தவிர்க்கவும் பாதுகாப்பான கட்டடம், தங்குமிடங்களில் பாதுகாப்பாக இருங்கள் வாகனம் ஓட்ட வேண்டாம், மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் மின் சாதனங்கள் / தொலைபேசி பயன்படுத்தக்கூடாது ஜன்னல் மற்றும் கதவை மூடி வைக்கவும் மின் சாதனங்கள் / மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம் மொபைல் போன் சார்ஜிங் செய்ய வேண்டாம். சார்ஜிங்கில் இருந்தால் எடுத்துவிடவும் குளிப்பதோ, பாத்திரங்கள் கழுவவோ, குளிக்கவோ கூடாது உயரமான கட்டடங்களின் மொட்டை மாடியில் உறங்க வேண்டாம் மரங்களின் கீழ் ஒதுங்க வேண்டாம் உயரமான மலைகள், கடல்கள், திறந்தவெளிகள், கரையோரங்கள், படகு சவாரி செய்ய வேண்டாம் உலோகப்பொருட்களை தொட வேண்டாம்.



10 ஆண்டுகளில் பலியானவர்கள்








      Dinamalar
      Follow us