மேக்ஸ் முல்லர் பப்ளிக் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,யில் 89 சதவீதம்
மேக்ஸ் முல்லர் பப்ளிக் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,யில் 89 சதவீதம்
ADDED : மே 12, 2024 07:05 AM

பசவேஸ்வர நகர்: பசவேஸ்வர நகர் மாக்ஸ் முல்லர் பப்ளிக் பள்ளி மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 88.81 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.
பெங்களூரு பசவேஸ்வர நகர் எட்டாவது பிரதான சாலையில் மேக்ஸ் முல்லர் பப்ளிக் பள்ளி உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா கூறியதாவது:
எங்கள் பள்ளியில் 143 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர். இதில், 12 மாணவர்கள் 90 சதவீதத்துக்கு அதிகமாகவும்; 29 மாணவர்கள் 85 சதவீதம் டிஸ்டிங்ஷனிலும்; 45 மாணவர்கள் 80 சதவீதமும்; 45 மாணவர்கள் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
இதில் மாணவர் மனிஷ் தண்டேல், மாணவியர் ஷமிதா, யுக்தா ஆகியோர் 95 சதவீதமும்; ஹேமா ஸ்ரீ, ப்ருத்வி ஸ்ரீ ஆகியோர் 94 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சிக்கு ஒத்துழைத்த ஆசிரியர்கள், பெற்றோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெறாதவர்கள், மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனிஷ் தண்டேல் ஷமிதா யுக்தா ஹேமா ஸ்ரீ ப்ருத்விஸ்ரீ