UPDATED : ஆக 04, 2024 08:26 PM
ADDED : ஆக 04, 2024 07:43 PM

போபால்: ம.பி.,யில் கோயில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
இங்கு சாகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஷாபூரின் ஹர்தவுல் பாபா கோயிலில் வழிபாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது கோயில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 9 குழந்தைகள் பலியாயினர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ‛ எக்ஸ்' தளத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நடந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. பலியானவர்களுக்கு அழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.