ADDED : செப் 07, 2024 08:00 PM
நொய்டா:புதுடில்லி அருகே போலி காலி சென்டர் நடத்திய 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
செக்டார் 63வது செக்டாரில் போலி காலி சென்டரில் இருந்து, பலருக்கு போன் செய்து, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவு, வேலைக்கு விசா வாங்கித் தருவதாகவும் பணம் வசூலித்து ஏமாற்றியுள்ளனர்.
இதுகுறித்து வந்த புகார்களைத் தொடர்ந்து, போலீஸ் துணைக் கமிஷனர் சக்தி மோகன் அவஸ்தி தலைமையில் போலீசார், நொய்டா 63வது செக்டார் இ பிளாக்கில் இருந்த கால் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.
துபாய், கனடா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏராளாமானோரை ஏமாற்றி பணம் வசூலித்திருப்பது தெரிய வந்தது.
அங்கிருந்த 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுக் 24 லேப்-டாப்கள், 3 கம்ப்யூட்டர்கள், ஒரு எல்.இ.டி., டிவி, ஒரு கீ போர்டு மற்றும் போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஒன்பது பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.