புனே கார் விபத்து வழக்கில் 900 பக்க குற்றபத்திரிக்கை தாக்கல்
புனே கார் விபத்து வழக்கில் 900 பக்க குற்றபத்திரிக்கை தாக்கல்
ADDED : ஜூலை 26, 2024 08:17 PM

புனே: புனேயில் போதையில் சொகுசு காரை ஓட்டி இருவர் பலியான சம்பவத்தில் இன்று மஹாராஷ்டிரா போலீசார் 900 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் கடந்த மே 19ம் தேதி, 'போர்ஷ்' என்ற விலையுயர்ந்த கார் சாலையில் தாறுமாறாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியது. இதில், பைக்கில் சென்ற இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியாகினர்.
பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரின், 17 வயது மகன் மதுபோதையில் அந்த காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சிறுவன் கைது செய்யப்பட்டு மே 19ம் தேதி, அந்த சிறுவனுக்கு சிறார் நீதிமன்ற நீதிபதி ஜாமின் வழங்கினார்.
இந்த வழக்கில் சிறுவனின் தந்தை , தாத்தா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் மஹாராஷ்டிரா குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் இன்று புனே சிறப்பு கோர்ட்டில் குற்றவாளிகளுக்கு எதிராக 900 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.