நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது 3,991 பக்கங்களில் குற்றப்பத்திரிகை ரேணுகாசாமி கொலை
நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது 3,991 பக்கங்களில் குற்றப்பத்திரிகை ரேணுகாசாமி கொலை
ADDED : செப் 05, 2024 12:51 AM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், கன்னட நடிகர்தர்ஷன் உட்பட 17 பேர் மீது 3,991 பக்க குற்றப்பத்திரிகையை, நீதிமன்றத்தில் கர்நாடக போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகாவின், சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. பிரபல கன்னட நடிகர்தர்ஷனின் தீவிர ரசிகர்.தர்ஷனுக்கும், அவரதுமனைவிக்கும் இடையில், தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ரா கவுடா இருப்பது பற்றிய செய்திகள், ஊடகங்களில் வெளியாகின.
இதனால் வெறுப்பான ரேணுகாசாமி, தன் இன்ஸ்டாகிராமில் இருந்து, பவித்ராவுக்கு ஆபாச புகைப்படங்கள், மெசேஜ் அனுப்பினார். இதனால் ஆத்திர மடைந்த தர்ஷன் உத்தரவுப்படி, சித்ரதுர்காவில் இருந்து கடந்த ஜூன் 8ம் தேதி, ரேணுகாசாமி பெங்களூருக்கு காரில் கடத்தி வரப்பட்டார்.
கார் ஷெட்டில் அவரை அடைத்து வைத்து, தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட பலர் கொடூரமாக தாக்கினர். இதில், ரேணுகாசாமி உயிரிழந்தார். அவரது உடலை சாக்கடை கால்வாயில் வீசினர். ஜூன் 10ல்தர்ஷன், பவித்ராஉட்பட 17 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டு வரும் 8ம் தேதியுடன், மூன்று மாதங்கள் ஆகிறது. வழக்கில், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், கடந்த சில தினங்களாக குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில், விசாரணை அதிகாரி சந்தன் தலைமையிலான போலீசார், மும்முரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை 11:30 மணிக்கு பெங்களூரு 24வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், நீதிபதி மாருதேஷ் பரசுராம் முன்பு, தர்ஷன் உட்பட 17 பேர் மீது 3,991 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கில் பவித்ரா, 'ஏ 1, தர்ஷன், 'ஏ 2' ஆக சேர்க்கப்பட்டுள்ளனர்.