பெங்., விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் கஞ்சா பறிமுதல்
பெங்., விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் கஞ்சா பறிமுதல்
ADDED : மே 07, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவனஹள்ளி: தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து, கடந்த 4ம் தேதி இரவு, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, 'தாய் ஏர்லைன்ஸ்' விமானம் வந்தது.
அந்த விமானத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர் கொண்டு வந்த பையை திறந்து பார்த்த போது, 'பேக்கிங்' செய்யப்பட்ட சிறிய அட்டை பெட்டி இருந்தது. அதற்குள் இரண்டு பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பது தெரிந்தது. பயணி கைது செய்யப்பட்டார்.
2 கிலோ 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 93 லட்சத்து 68 ஆயிரத்து 10 ரூபாய். கைதான பயணி பற்றிய விபரம் வெளியாகவில்லை.