தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/97.92 சதவீத ரூ. 2000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பின

97.92 சதவீத ரூ. 2000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பின

97.92 சதவீத ரூ. 2000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பின


ADDED : ஆக 02, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 01:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை : உயர்மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் இதுவரை 97.92 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் ரிசவர் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மார்ச் 01-ம் தேதி நிலவரப்படி 2000 ரூபாய் நோட்டுகள் 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும்; இன்னும் ரூ. 8,470 கோடி மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளது.தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இறுதி நிலவரப்படி 97.76 சதவீதம் ரூ. 2000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.

இன்று (ஆக.01)ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி, பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.98 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இன்னும் 2.08 சதவீதம் என ரூ.7,409 கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us