2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98.18% திரும்பப் பெறப்பட்டன; ரிசர்வ் வங்கி தகவல்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98.18% திரும்பப் பெறப்பட்டன; ரிசர்வ் வங்கி தகவல்
ADDED : மார் 02, 2025 09:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98.18 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து உள்ளது.
கடந்த 2023, மே 19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதுவரை திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி நிலவரப்படி ரூ.3.56 லட்சம் மதிப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நாட்டில் புழக்கத்தில் இருந்தன. தற்போது மக்களிடம் ரூ.6471 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழகத்தில் உள்ளன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98.18% திரும்பப் பெறப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.