ADDED : மே 24, 2024 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ளது வாழப்புழை கிராமம். நேற்று முன்தினம் அதிகாலை தென்னந்தோப்பில் அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கியது.
வனத்துறையினர் பல மணி நேரம் போராடியும் சிறுத்தையை மீட்க முடியவில்லை. மதியம், 12:30 மணிக்கு, வனத்துறை மருத்துவ குழு, மயக்க ஊசி செலுத்தி, சிறுத்தையை மீட்டனர். கூண்டில் ஆக்ரோஷமாக இருந்த சிறுத்தை, திடீரென உயிரிழந்தது.
தலைமை கால்நடை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் கூறுகையில், ''இறந்தது 4 வயது பெண் சிறுத்தை. கம்பிவேலியில் சிக்கியதால் உடல் உட்புற உறுப்புகளில் ஏற்பட்ட காயம் கரணமாக பலியாகி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின், சிறுத்தையின் உடல் வனத்தில் அடக்கம் செய்யப்படும்,'' என்றார்.