ADDED : ஆக 01, 2024 12:12 AM
கதக் : கதக் நகரில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது முதியவரை காளை ஒன்று முட்டியதில் பலியானார்.
கதக் - பெட்டகேரி இரட்டை நகர் சாலை ஓரத்தில், சங்கரப்பா, 70, என்பவர், நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இணைப்பு சாலையில் இருந்து வேகமாக ஓடி வந்த காளை ஒன்று, சங்கரப்பாவை பின்னால் இருந்து முட்டி துாக்கி வீசியது. இதை பார்த்த அப்பகுதியில் இருந்த சிலர் கற்களாலும், தடியாலும் விரட்ட முயற்சித்தனர். ஆனாலும், கீழே விழுந்த முதியவரை மீண்டும் மீண்டும் முட்டி தள்ளிவிட்டு சென்றது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னரே ஆம்புலன்ஸ் வந்தது.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முதியவர் உயிரிழந்தார். 'கதக் நகராட்சியின் அலட்சியமே காரணம்' என கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகராட்சி கமிஷனர் பிரசாந்த் வரகப்பா, சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தினார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.