5 ரூபாய் தராத கண்டக்டர் நியாயம் கேட்ட பேருந்து பயணி
5 ரூபாய் தராத கண்டக்டர் நியாயம் கேட்ட பேருந்து பயணி
ADDED : ஏப் 18, 2024 04:32 AM

பெங்களூரு, : பி.எம்.டி.சி., கண்டக்டர் ஐந்து ரூபாய் சில்லறையை கொடுக்காதது பற்றி, 'எக்ஸ்' பக்கத்தில், பிசியோதெரபிஸ்ட் நியாயம் கேட்டு உள்ளார்.
பெங்களூரு, ஒயிட்பீல்டில் வசிக்கும் பிசியோதெரபிஸ்ட் நிதின் கிருஷ்ணா. சமூக வலைதளமான, 'எக்ஸ்' பக்கத்தில், பி.எம்.டி.சி., பஸ் டிக்கெட் படத்தை பதிவு செய்து, 'ஜெயநகர் ராகிகுட்டா கோவிலில் இருந்து, ஹெச்.எஸ்.ஆர்.லே., அவுட் வரை, பயணம் செய்தேன்.
டிக்கெட்டுக்காக 20 ரூபாய் கொடுத்தேன். டிக்கெட் கட்டணம் 15 ரூபாய் மட்டுமே. கண்டக்டர், மீதி ஐந்து ரூபாய் தரவில்லை. நான் ஐந்து ரூபாய் இழந்துள்ளேன். கண்டக்டரிடம் ஒரு ரூபாய் கூட சில்லறை இல்லையா; இதற்கு என்ன வழி?' என, நியாயம் கேட்டு இருந்தார்.
இந்த பதிவிற்கு நெட்டிசன்கள், லைக்குகள் போட்டனர். அதே நேரம் கமென்ட்களும் வந்தன. 'யு.பி.ஐ., பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால், சில்லறை பிரச்னை வராது' என்று சிலர் கருத்து பதிவிட்டனர்.
'டம்மாக்' செயலியை பயன்படுத்தினால், பஸ் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்று தெரிந்துவிடும். அதற்கு ஏற்ப சில்லறை மாற்றிக் கொண்டு பயணம் செய்யலாம் என, ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இன்னொருவர், 'அந்த ஐந்து ரூபாய் ராகிகுட்டா கோவிலுக்கு' என, பதிவிட்டு இருந்தார்.

