இயற்கை முறையில் வெல்லம் லட்ச, லட்சமாக சம்பாதிக்கும் விவசாயி
இயற்கை முறையில் வெல்லம் லட்ச, லட்சமாக சம்பாதிக்கும் விவசாயி
ADDED : டிச 01, 2024 04:04 AM

விஜயபுரா மாவட்டம், கெடகி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயி சரணப்பா மஜ்ஜகி - ரேவதி தம்பதி. தங்களின் 4.5 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து, ஆண்டுக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ஒரு ஏக்கரில் கரும்பு, மீதமுள்ள ஏக்கரில் சோயா பீன்ஸ், மஞ்சள், மிளகாய், கரும்பு நிலத்தில் ஊடுபயிராக கொண்டைக்கடலை, நிலக்கடலை விளைவிக்கிறார்.
கரும்பில் இருந்து மூன்று வகையான வெல்லம் தயாரிக்கிறார். சாதாரண இயற்கை வெல்லத்தை கிலோ 80 ரூபாய்க்கும்; ஜாதிக்காய் வெல்லத்தை கிலோ 100 ரூபாய்க்கும்; சுத்தமான பசு நெய், பச்சை இலை, ஏலக்காய் சேர்த்து மசாலா வெல்லம் கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர்.
மஞ்சள்
அரை ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் மஞ்சள், சிறிய இயந்திரம் வாயிலாக, இரண்டாக பிரிக்கப்படுகிறது. அதன் பின், அதை உலர்த்தி, பொடியாக்கி, ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்கின்றனர்.
ஊடுபயிராக பயிரிடப்படும் எஞ்சிய தானியங்கள், வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. அதில் மீதமாகும் தானியங்கள், விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் நான்கு பசுக்கள், ஒரு காளை, கன்றையும் பராமரித்து வருகின்றனர். இக்கால்நடைகள், 4.5 ஏக்கர் நிலத்துக்கு போதுமான உரம் தருகின்றன. இதனால் உரத்துக்கு தனியாக செலவு எதுவும் செய்வதில்லை.
இந்தாண்டு இவர்கள் தயாரித்த, இயற்கை ஜவ்வரிசிக்கு, அதிக 'டிமாண்ட்' ஏற்பட்டு உள்ளது. அடுத்தாண்டு அதிகளவில் பயிரிட திட்டமிட்டு உள்ளனர். இயற்கை மஞ்சள் சாகுபடியில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
கோமியம்
மஞ்சள் துாள் தயாரிக்கவும், மாட்டின் கோமியத்திற்கு அதிக விலையில் இயந்திரங்கள் வாங்க தேவையில்லை. இங்கு இருக்கும் பொருட்கள் மூலம் தயார் செய்துவிடுவோம்.
இவர்களின் நிலத்துக்கு தேவையான நீரை, பீமா ஆற்றில் இருந்து பைப் மூலம் எடுத்து கொள்கின்றனர். கோடை காலத்திலும் ஆற்றில் நீர் இருப்பதால், விளைச்சலுக்கு தண்ணீர் கிடைக்கிறது.
தினமும் அதிகாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை, மாட்டின் கோமியம் சேகரிக்கப்படுகிறது. அதில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. 200 மில்லி பாட்டிலில் சேமித்து, ஒரு பாட்டில் 80 ரூபாய்க்கு விற்கின்றனர்.
இந்த மருந்து ஆஸ்துமா, பித்தம், இருமல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முழங்கால் வலி, தோல் நோய், மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக கருதப்படுகிறது. இதனை காலையில் வெறும் வயிற்றில் 5 மி.லி., அளவு சாப்பிட்டு வந்தால், இந்நோய் உள்ளோர் குணமாவர் என விவசாயி சரணப்பா மஜ்ஜகி தெரிவித்தார்
- நமது நிருபர் -.