ADDED : பிப் 28, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போபால், மத்திய பிரதேசத்தின் சிவபுரியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 23ம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார்.
மூன்று மணி நேர தேடுதலுக்கு பின், பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் சிறுமி மீட்கப்பட்டார்.
விசாரணையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
போதை பழக்கத்துக்கு அடிமையான சிறுவன், சிறுமியை வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அடித்து சித்ரவதை செய்து பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில், சிறுமிக்கு அந்தரங்க உறுப்பு உட்பட உடலின் பல இடங்களில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, சிறுமிக்கு 29 தையல்கள் போடப்பட்டன. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

