140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்: என்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்: என்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
ADDED : ஜூலை 10, 2024 05:02 PM

புதுடில்லி: 'பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது 140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ல், ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சென்ற போது, அந்நாட்டின் உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதிபர் மாளிகை விழாவில், 'ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருதை, நேற்று பிரதமர் மோடிக்கு வழங்கி புடின் கவுரவித்தார்.
140 கோடி இந்தியர்களுக்கு பெருமை
இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது 140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இந்த விருதை பிரதமர் ஏற்றுக்கொண்டார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் கூறினார்.