அசாதுதீன் ஓவைசி தலைமையில் உ.பி.,யில் புதிய கூட்டணி உதயம்
அசாதுதீன் ஓவைசி தலைமையில் உ.பி.,யில் புதிய கூட்டணி உதயம்
ADDED : ஏப் 01, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள 80 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இங்கு, அப்னா தளம் காமேராவாடி என்ற கட்சி, சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து, 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமாஜ்வாதியுடன் தன் கூட்டணியை சமீபத்தில் அப்னா தளம் காமேராவாடி முறித்தது.
இதையடுத்து, அக்கட்சியுடன் வரும் லோக்சபா தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., நேற்று கூட்டணி அமைத்தது.
இக்கூட்டணியில் சில மாநில கட்சிகளும் இணைந்துள்ளன.
இது குறித்து, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், ''இந்த கூட்டணி, லோக்சபா தேர்தலுக்கானது மட்டுமல்ல; அதற்கு பின்னரும் நீடிக்கும்,'' என்றார்.

