ADDED : ஜூலை 09, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பன்னரகட்டா : பெங்களூரு பன்னர கட்டா உயிரியல் பூங்காவில், ரீட்டா என்ற யானைக்கு ஆண் யானை பிறந்தது.
பன்னரகட்டா உயிரியல் பூங்கா நிர்வாக இயக்குனர் சூர்யாசென் கூறியதாவது:
பூங்காவில் 11 ஆண் யானைகளும், 15 பெண் யானைகளும் உள்ளன. இதில், ரீட்டா என்ற யானைக்கு நேற்று முன்தினம் ஆண் குட்டி பிறந்தது. இதன் மூலம் ஆண் யானைகளின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்து உள்ளது. 9 வயது ரீட்டா யானைக்கு, இது முதல் பிரசவமாகும். இந்த யானையை, லில்லி, கவுரி ஆகிய யானைகள் கவனித்து கொள்கின்றன.
குட்டியை, மற்ற யானைகள் துணையாக நின்று பாதுகாக்கின்றன. குட்டி யானை, 100 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. ரீட்டாவின் பாகன் ரவி, கவனித்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்ற யானைகளுடன் விளையாடிய குட்டி யானை. இடம்: பன்னரகட்டா உயிரியல் பூங்கா, பெங்களூரு.