ADDED : செப் 14, 2024 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஜியாபாத்:உத்தர பிரதேசத்தில், பழச்சாறுடன் சிறுநீர் கலந்து விற்றவர் மற்றும் அவரது 15 வயது மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
உ.பி., மாநிலம் காஜியாபாத்தில் பழச்சாறு விற்கும் அமீர் என்பவர் சிறுநீர் கலந்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சிலர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.
போலீஸ் உதவி கமிஷனர் பாஸ்கர் வர்மா தலைமையில், அந்தக் கடையில் சோதனை நடத்தி, சிறுநீர் நிரப்பி வைத்திருந்த கேன் ஒன்றை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் அமீர் மற்றும் பழச்சாறுடன் சிறுநீரை கலந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய அவரது 15 வயது மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.