தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சமையல் அறையில் சீறிய காளிங்க நாகம்

சமையல் அறையில் சீறிய காளிங்க நாகம்

சமையல் அறையில் சீறிய காளிங்க நாகம்


ADDED : ஜூன் 10, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தரகன்னடா, : யளவள்ளி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் சமையல் அறையில், 10 அடி நீளமான காளிங்க நாகம் புகுந்ததால், பதற்றமான சூழ்நிலை உருவானது.

உத்தரகன்னடா குமட்டாவின் யலவள்ளி கிராமத்தில் வசிப்பவர் கணேஷ்பட். நேற்று காலை 6:00 மணியளவில், இவரது மனைவி டீ தயாரிக்க சமையல் அறைக்கு சென்றார்.

அப்போது 'புஸ்' 'புஸ்' என்ற சத்தம் வந்தது. சத்தம் எங்கிருந்து வருகிறது என, பார்த்த போது மேடையில் இருந்த மிக்சி அருகே, கருமை நிறத்தில் பாம்பு சுற்றியிருப்பது தெரிந்தது.

இது சாதாரண பாம்பாக இருக்கலாம் என, கணேஷ் அருகில் சென்று விரட்ட முயற்சித்த போது, காளிங்க நாகம் படம் எடுத்து நின்றது.

பீதியடைந்த குடும்பத்தினர், அதை விரட்டும் முயற்சியை விட்டு விட்டு, 'ஸ்னேக்' பவனுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பவன், நீண்ட நேரம் போராடி 10 அடி நீளமான காளிங்க நாகத்தை மீட்டு, வனப்பகுதியில் விட்டார்.

உத்தரகன்னடாவின், ஒரே பகுதியில் ஸ்னேக் பவன் மீட்ட, மூன்றாவது காளிங்க நாகம் இதுவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us