sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி முதல்வர் வீட்டில் ரகசிய ஆவணம் சிக்கியது

/

டில்லி முதல்வர் வீட்டில் ரகசிய ஆவணம் சிக்கியது

டில்லி முதல்வர் வீட்டில் ரகசிய ஆவணம் சிக்கியது

டில்லி முதல்வர் வீட்டில் ரகசிய ஆவணம் சிக்கியது

1


ADDED : மார் 23, 2024 12:16 AM

Google News

ADDED : மார் 23, 2024 12:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி :டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், 150 பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணத்தை கைப்பற்றினர்.

--அமலாக்கத்துறையின் இரண்டு உயர் அதிகாரிகளை கெஜ்ரிவால் உளவு பார்த்ததும், அவர்களுக்கு கிரிமினல்களுடன் உள்ள தொடர்பு, அதன் வாயிலாக அவர்கள் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் என, ஏராளமான தகவல்களை முதல்வர் சேகரித்து இருப்பதும், அந்த

ஆவணத்தில் பதிவாகி இருந்தது.

உத்தரவு


ரகசிய ஆவணத்தில் இடம் பிடித்துள்ள இரு அதிகாரிகளில் ஒருவர், இதே சோதனை குழுவில் இருந்ததால், அவர் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்துக்கு செய்தி அனுப்பப்பட்டது. உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், இது குறித்த எந்த தகவலையும், ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர் என, 'இந்தியா டுடே' செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆவணத்தில் உள்ள விபரங்களின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மேலிடத்தில் ஆலோசனை நடைபெறுவதாகவும் கூறியுள்ளது.டில்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரான முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத்துறை வியாழன் இரவு கைது

செய்தது.

கைதுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், கெஜ்ரிவால் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. சட்ட முறைப்படி செயல்படுமாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்ததால், அந்த வழக்கை வாபஸ் பெற்று செஷன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையும் மனுத்தாக்கல் செய்தது. பலத்த பாதுகாப்புடன் கெஜ்ரிவாலையும் ஆஜர்படுத்தியது. அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜரானார். ''மதுபான கொள்கை ஊழல் சதியில், கெஜ்ரிவால் தான் மூளையாகச் செயல்பட்டுள்ளார். பஞ்சாப் சட்டசபை தேர்தல் செலவுக்காக தென் மாநில மதுபான நிறுவனத்திடம், 100 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். கோவா சட்டசபை தேர்தலுக்காக, 45 கோடி ரூபாய் பெற்றுள்ளார்,” என, ராஜு தெரிவித்தார்.

தனிநபர் அல்ல


'நான்கு ஹவாலா பரிமாற்றங்கள் வாயிலாக, இந்த தொகை கைமாறியுள்ளது; வாக்குமூலங்கள், தொலைபேசி பேச்சு பதிவுகள் வாயிலாக இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி

தனி நபர் அல்ல; அது ஒரு நிறுவனம் என்பதால், அதன் நடத்தைக்கு கட்சியில் உள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்' என்றும் அவர் மேலும் கூறினார்.

கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். ''பதவியில் இருக்கும் முதல்வர் கைது செய்யப்படுவது, நாட்டில் இதுவே முதல் முறை. வழக்கு எதுவானாலும், அவரை இப்போது கைது செய்ய அவசியமே இல்லை. இது, வழக்கமான கேஸ் இல்லை. மிகப்பெரிய ஜனநாயக பிரச்னை அடங்கி உள்ளது,” என, அவர் வாதிட்டார்.

சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, முதல்வர் கெஜ்ரிவாலை வரும் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். கெஜ்ரிவால் கைதுக்கு முன் அமலாக்கத்துறை அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கிய ரகசிய ஆவணம், இந்த வழக்கில் புது பூகம்பத்தை கிளப்பி உள்ளது. அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள இரண்டு அதிகாரிகள் குறித்த ரகசிய தகவல்கள் அதில் உள்ளன என்று, ஈ.டி., வட்டாரங்கள் தெரிவித்தன.

சோதனை நடத்திய டீமுக்கு தலைமை வகித்த அதிகாரியின் பெயரே கெஜ்ரிவாலின் ஆவணத்தில் இருந்தது, அரசின் உயர் மட்டம் வரையில், அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. டில்லி அரசின் மதுபான கொள்கை வழக்கின் புலனாய்வே, அவர் மேற்பார்வையில் தான் நடந்தது என்பதே இதற்கு காரணம். அமலாக்கத்துறை குறித்து கெஜ்ரிவால் உளவு பார்த்தது இதன் வாயிலாக தெரிய வந்துள்ளது. எதற்காக இதை அவர் செய்தார் என்பது குறித்து, பல்வேறு ஊகங்கள் உலா வருகின்றன.

கெஜ்ரிவால் கைதானதை கண்டித்து, டில்லி பா.ஜ., அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், ஈடுபட்ட அமைச்சர்கள் ஆதிஷி, சவுரவ் பரத்வாஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் வாயிலாக, எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வதாக இண்டியா கூட்டணி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

கெஜ்ரிவால் மனைவி கண்டனம்


கெஜ்ரிவால் மனைவி சுனிதா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவாலை, அதிகாரம் கையில் இருப்பதால், பிரதமர் மோடி நசுக்கப் பார்க்கிறார். இது, டில்லி மக்களுக்கு செய்யும் துரோகம். அவர் வெளியே இருந்தாலும், உள்ளே இருந்தாலும் நாட்டிற்காகவே அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன் என, கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் உருக்கமுடன் தெரிவித்ததாக அவரது கட்சியினரும் தெரிவித்தனர்.

என்னை காயப்படுத்தியது


ஊழலுக்கு எதிராக என் தலைமையில், 2011ல் பிரமாண்ட போராட்டம் நடந்த போது, அதில் என்னுடன் பங்கேற்று, ஊழலை எதிர்த்து போராடியவர் கெஜ்ரிவால். ஊழல் மற்றும் மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், டில்லியில் மதுபான கொள்கையை கொண்டு வந்தது, என்னை மிகவும் காயப்படுத்தியது.

அந்தக் கொள்கையை அப்போதே கைவிடச் சொன்னேன். ஆனால், என்ன செய்வது; இன்று தன் செயலால், அவர் கைதுக்கு ஆளாகி உள்ளார். அவர் தவறு செய்யவில்லை என்றால், இந்த கைது நடந்திருக்காது. - அன்னா ஹசாரேசமூக ஆர்வலர்






      Dinamalar
      Follow us