ADDED : மே 11, 2024 06:50 AM

சிக்கமகளூரு: சிக்கமகளூரு நகருக்குள் புகுந்த ஒற்றை யானையால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தஉள்ளனர்.மலை மாவட்டமான சிக்கமகளூரில், யானைகள் உணவு தேடி வழக்கமாக காபித் தோட்டங்களுக்குள் புகுந்து விளைச்சல்களை நாசப்படுத்தி வந்தன. ஆனால், நேற்று வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை, ஜெயநகர் லே - அவுட்டிற்குள் உணவு தேடி புகுந்தது.
சாலையில் சென்றபோது திடீரென யானையை பார்த்த அப்பகுதி மக்கள், அலறியடித்துக் கொண்டு அருகில் இருந்த வீடுகளுக்குள் புகுந்து உயிர் தப்பினர்.
இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள், யானையை கத்ரிமித்ரி வனப்பகுதிக்குள் விரட்டினர்.
'கூட்டத்துடன் சுற்றித்திரிந்த இந்த யானைக்கு 10 - 12 வயது இருக்கும். வழிதவறி நகருக்குள் நுழைந்துவிட்டது. யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால் பொது மக்கள் பயப்பட வேண்டாம்' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.