ஒருவரையே திருமணம் செய்து சாவிலும் பிரியாத சகோதரியர்
ஒருவரையே திருமணம் செய்து சாவிலும் பிரியாத சகோதரியர்
ADDED : மே 03, 2024 07:05 AM
பாகல்கோட்: ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட சகோதரியர், இறப்பிலும் ஒன்று சேர்ந்தனர்.
பாகல்கோட் ஜமகன்டியின், துங்களா கிராமத்தில் வசித்தவர் கிட்டவ்வா, 90. இவரது தங்கை காசி பாய், 84. ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்திருந்த சகோதரிகள், ஒரே ஆணை திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
பல ஆண்டுகளுக்கு முன், இதே கிராமத்தை சேர்ந்த ஹனுமந்த கொலபாவி என்பவரை திருமணம் செய்து கொண்டனர்.
ஒரே நாளில் இவர்களின் திருமணம் நடந்தது. கிட்டவ்வாவுக்கு ஒரு மகனும், காசிபாய்க்கு நான்கு மகள்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், கணவர் ஹனுமந்த கொலபாவி காலமானார்.
வயது முதிர்வு காரணமாக, சகோதரியர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டனர். 15 நாட்களாக சுயநினைவின்றி இருந்த காசிபாய், நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு உயிரிழந்தார். இதை கேட்ட கிட்டம்மா துக்கத்தில் ஆழ்ந்தார். அவர், காலை 9:30 மணிக்கு உயிரிழந்தார்.