ADDED : மே 11, 2024 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீதாபூர்:உத்தர பிரதேசத்தில் தாய், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். உ.பி., மாநிலம் சீதாபூர் மாவட்டம் பிளாஹாபூர் கிராமத்தில் வசித்தவர் அனுராக் சிங்,45.
இவர் தன் தாய் சாவித்ரி சிங், 62, மனைவி பிரியங்கா, 40, மகள்கள் ஆஸ்வி, 12, ஆர்னா, 8, மற்றும் மகன் ஆத்விக், 4, ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். அதன்பின், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அனுராக் சிங் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.