ADDED : ஜூலை 06, 2024 02:30 AM
நிஜாமுதீன்: தென்கிழக்கு டில்லியில், இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற இரு சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நிஜாமுதீன் பஸ்தியை சேர்ந்தவர் சாஹில், 23. இவர் புதன்கிழமை இரவு ஒரு பூங்காவில் தனியே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த இரு சிறுவர்கள், சாஹிலை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.
சாஹில் கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த அவரது பெற்றோர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதற்குள் சப்தர்ஜங் மருத்துவமனையில் சாஹில் அனுமதிக்கப்பட்டார். சாஹிலின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பும் சாஹிலை கொல்ல முயற்சி நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. குற்றவாளிகள் இருவரும் மைனர் என்று விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.