கொப்பாலில் பயங்கர தீ விபத்து 3 மணி நேரம் போராடி அணைப்பு
கொப்பாலில் பயங்கர தீ விபத்து 3 மணி நேரம் போராடி அணைப்பு
ADDED : மே 21, 2024 06:22 AM

கொப்பால்: பெயின்ட் கடையில் ஏற்பட்ட தீ, மளமளவென அருகில் உள்ள கடைகளிலும் பரவியது. மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பின், தீ அணைக்கப்பட்டது.
கொப்பால் நகர மத்திய பஸ் நிலையம் அருகில், கடைகள் அமைந்துள்ளன. இதில், மோகன் மேகராஜ் என்பவருக்குச் சொந்தமான 'ராயல் பெயின்ட்ஸ்' கடை உள்ளது.
நேற்று மதியம் இந்த கடையில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த கடையில் இருந்தவர்கள் வெளியே ஓடி தப்பினர். அவர்களே தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. அதற்குள் தீ வேகமாக பரவ ஆரம்பித்தது.
இக்கடையின் அருகில், வாகன பேட்டரி விற்பனை செய்யும் கடை உள்ளது. அங்குள்ள ஊழியர்கள், அப்பகுதி மக்கள் உதவியுடன் பேட்டரிகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில், பெயின்ட் கடை தீ, அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வீரர்கள் வந்தனர். ஆனால் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். சிரமமாக இருந்ததால், மாவட்டத்தில் உள்ள மற்ற தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பல வாகனங்கள் வந்த போதும், தீயை அணைக்க மூன்று மணி நேரமானது.
இந்த தீ விபத்தில் வீடுகளுக்கு பயன்படும் பிளைவுட், துணிக்கடை, மீன் கடை உட்பட பல கடைகள் தீயில் எரிந்தன.
கடைகள் எரிவதை பார்த்து, உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களுக்கு அங்கிருந்தவர்கள், குடும்பத்தினர் ஆறுதல் கூறினர். எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.

