காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை
ADDED : ஜூன் 26, 2024 04:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டைநடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக, ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.