ADDED : மார் 15, 2025 01:40 AM

உலகில் எந்த நாட்டிலும், எந்த மதத்திலும் ஹிந்து சனாதன தர்மத்தில் இருப்பதைப் போன்ற பாரம்பரியம்மிக்க பண்டிகைகள் இல்லை. சனாதன தர்மத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நம்பிக்கையே பண்டிகைகளின் ஆன்மா. பண்டிகைகள் வாயிலாக இந்தியா வளர்ச்சி அடைகிறது.
யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,
அவுரங்கசீபை விட மோசம்!
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புதைத்து, 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரை பா.ஜ.,வினர் மறக்க வேண்டும். தற்போது மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு அவுரங்கசீபா காரணம்? மஹாராஷ்டிரா அரசின் செயல்பாடு, அவுரங்கசீபை விட மோசமாக உள்ளது.
சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி.,
சிவசேனா உத்தவ் அணி
தலைவணங்க மாட்டோம்!
பள்ளி கட்டடங்கள் கட்டியது தொடர்பாக என் மீது, மத்திய அரசு வழக்கு பதிவு செய்துஉள்ளது. பா.ஜ.,வும், மத்திய அரசும் எங்கள் மீது எத்தனை வழக்கு போட முடியுமோ போடுங்கள். ஆனால் நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். தொடர்ந்து போராடுவோம்.
மணீஷ் சிசோடியா
மூத்த தலைவர்,
ஆம் ஆத்மி