அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் துர்க்கை ரசியல்வாதிகளுக்கு திர்ஷ்டம் ளிக்கும்
அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் துர்க்கை ரசியல்வாதிகளுக்கு திர்ஷ்டம் ளிக்கும்
ADDED : செப் 10, 2024 06:39 AM

பொதுவாக ஒரு மாவட்டத்தில் ஒன்று, இரண்டு ஹெலிபேட்கள் இருந்தாலே அதிகம். சிறிய மாவட்டங்களில், தற்காலிக ஹெலிபேட்கள் அமைக்கப்படும். ஆனால் சோமதேவரஹட்டி என்ற சிறிய கிராமத்தில், இரண்டு நிரந்தர ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம், சக்தி வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில்.
விஜயபுரா, திக்கோடாவின் சோமதேவரஹட்டி கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள துர்க்கை அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள் என, பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு இந்த அம்மன் மிகவும் அதிர்ஷ்டமானவர்.
கேட்ட வரம் கிடைக்கும் என்பதால், அரசியல்வாதிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். கர்நாடகா மட்டுமின்றி, நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், கட்சி, ஜாதி பாகுபாடின்றி அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் துர்க்கை அம்மனை தரிசிக்க வருகின்றனர்.
அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் அதிகம் வருவதால், இந்த சிறிய கிராமத்தில், இரண்டு நிரந்தரமான ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோமதேவரஹட்டி கிராமத்தின் மக்கள் தொகை வெறும் 2,500 மட்டுமே. 10 ஆண்டுகளுக்கு முன்பே, கிராமத்தில் இரண்டு ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டன.
எப்படிப்பட்ட கஷ்டங்களையும் நிவர்த்தி செய்யும் சக்தி, துர்க்கை அம்மனுக்கு உள்ளது. இதனால் பெருமளவில் பக்தர்களை ஈர்க்கிறது. பல பகுதிகளில் இருந்தும், திக்கோட்டாவுக்கு பஸ், ரயில் வசதி உள்ளது.
தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் நெய் விளக்கு போட, பெருமளவில் பெண்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் கோவிலில் திருவிழா நடப்பது வழக்கம். இதில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
நடப்பாண்டு ஜூலையில் துர்க்கை அம்மன் திருவிழா நடந்தது. வெவ்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.- நமது நிருபர் -