ADDED : செப் 05, 2024 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷிவமொகா: ''மரியாதையாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்,'' என்று, சித்தராமையாவை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் அளித்த பேட்டி: மூடா முறைகேட்டிற்கு பொறுப்பு ஏற்று, முதல்வர் பதவியை சித்தராமையா மரியாதையுடன், ராஜினாமா செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப்புக்கு பின் 100க்கு 100 சதவீதம் அவர் பதவி விலகும் சூழ்நிலை வரும். அவர் செய்த ஊழல்கள் நிரூபிக்கப்பட்டால், தப்பிக்க வாய்ப்பே இல்லை. தப்பிக்க அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.
பா.ஜ., ஆட்சியில் நடந்ததாக கூறப்படும், கொரோனா ஊழல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எங்கள் மீது எந்த தவறும் இல்லை. சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் எதையும் எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.