ADDED : ஆக 20, 2024 11:43 PM

கொப்பால் : தொடர்ந்து கனமழை பெய்ததால், சங்கபுரா கிராமத்தில் உள்ள மலையில் இருந்து உருண்ட பெரிய பாறை, இரும்பு குடிநீர் குழாய் மீது மோதி நின்றதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கர்நாடகாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், மலை பிரதேசங்களில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கொப்பால் மாவட்டம், கங்காவதியின் சங்கபுரா கிராமத்தில், சிறிய மலையை ஒட்டி, வீடுகள் அமைந்துள்ளன.
நேற்று அதிகாலை சிறு மலையில் இருந்த பெரிய கற்பாறை உருண்டு வந்தது.
நல்ல வேளையாக வீட்டின் அருகில் 4 அங்குல இரும்பு குடிநீர் குழாய் இருந்ததால், அதில் மோதி நின்றது.
இதனால் அதிர்ஷ்டவசமாக வீடுகள் மீது விழாமல் நின்றது. இல்லையெனில், உயிர் தேசம் ஏற்பட்டிருக்கும். வீட்டின் அருகில் விழுந்த பெரிய பாறையை, அதிர்ச்சியுடன் கிராம மக்கள் பார்த்து செல்கின்றனர்.
வீட்டின் அருகில் உருண்டு விழுந்த பாறை. இடம்: கங்காவதி, கொப்பால்.

