'கிரஹலட்சும ி ' திட்ட பணத்தில் வாஷிங் மிஷின் வாங்கிய பெண்
'கிரஹலட்சும ி ' திட்ட பணத்தில் வாஷிங் மிஷின் வாங்கிய பெண்
ADDED : ஆக 10, 2024 11:26 PM
ஹாவேரி: 'கிரஹலட்சுமி' திட்டத்தின் கீழ், தனக்கு கிடைத்த 2,000 ரூபாய் உதவித்தொகையை சேமித்து, ஒரு பெண் வாஷிங் மிஷின் வாங்கினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், 'கிரஹலட்சுமி' என்ற பெயரிலான திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதை பெண்கள், தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
ஹாவேரி, ஷிகாவியில் வசிக்கும் லதா என்பவர், கிரஹலட்சுமி பணத்தை, சேமித்து வைத்து உகாதி பண்டிகையின்போது, புதிதாக பிரிட்ஜ் வாங்கினார்.
ஹாவேரி, ஹனகல்லின், பாளபேடம் கிராமத்தில் வசிக்கும் சம்பாவதி கரெவென்னனவர் என்பவர், திட்டத்தின் பணத்தை சேமித்து வைத்து, வாஷிங் மிஷின் வாங்கி உள்ளார். இதற்கு பூஜையும் செய்தார்.
இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.
சம்பாவதி கூறுகையில், ''தினமும் அதிகமான பணி செய்ய வேண்டி இருந்தது.இப்போது வாஷிங் மிஷின் வந்ததால், பணிச்சுமை குறையும். திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் சித்தராமையாவுக்கு, என் நன்றி,'' என்றார்.