ADDED : ஆக 21, 2024 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு கடுந்துருத்தி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராமச்சந்திரனின் மனைவி சங்கீதா, 35. கோட்டை மைதானம் அருகே உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், இவர் நேற்று காலை, 8:35 மணிக்கு வேலைக்கு செல்ல, வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் சென்றார். யாக்கரை சந்திப்பில், மீனாட்சிபுரத்தில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த தனியார் பஸ் மோதியது.
இதில் படுகாயமடைந்த சங்கீதா, சம்பவ இடத்திலேயே இறந்தார். பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.