இளைஞர் காங்., பொதுச்செயலரை பார்த்து ஆபாச சைகை காட்டிய வாலிபர்
இளைஞர் காங்., பொதுச்செயலரை பார்த்து ஆபாச சைகை காட்டிய வாலிபர்
ADDED : பிப் 28, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாம்ராஜ்பேட்: கர்நாடக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் அக் ஷதா ரவிகுமார். இவர், நேற்று முன்தினம் தனது காரில் பெங்களூரு சாம்ராஜ்பேட் கோபாலன் மால் அருகில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு முன்னால், இன்னொரு காரில் சென்ற வாலிபர், காரை தாறுமாறாக ஓட்டிச் சென்றார். அந்த வாலிபருக்கு, அக்ஷதா புத்திமதி கூறினார்.
கோபம் அடைந்த வாலிபர், அக் ஷதாவை பார்த்து ஆபாச சைகை காட்டிவிட்டு சென்றார். இதுகுறித்து சாம்ராஜ் பேட் போலீசில் அக் ஷதா புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ஆபாச சைகை காட்டிய ஹர்ஷா, 32 என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

