ADDED : ஆக 05, 2024 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயபுரா : கண் அடித்து, தவறான சைகை காண்பித்த வாலிபர் கன்னத்தை, இளம்பெண் செருப்பால் பதம் பார்த்தார்.
விஜயபுரா மாவட்டத்தின் விஜயபுரா நகர பஸ் நிலையம் அருகில், நேற்று காலை பஸ் ஏறுவதற்கு ஒரு இளம்பெண் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், அந்த பெண்ணை பார்த்து, கண் அடித்து, தவறான சைகை காண்பித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த இளம்பெண், தன் செருப்பை கழற்றி வாலிபரின் கன்னத்தில், 'பளார் பளார்' என்று அறைந்தார். இதை கவனித்த மற்ற பயணிரும், அந்த வாலிபரை பிடித்து தாக்கினர். பின், போலீசாரை வரவழைத்து, அவரை ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.