உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் டில்லி அமைச்சர்
உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் டில்லி அமைச்சர்
UPDATED : ஜூன் 25, 2024 11:41 AM
ADDED : ஜூன் 25, 2024 07:01 AM

புதுடில்லி: டில்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆம்ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர், போராட்டத்தை கைவிட்டார்.
டில்லியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அதை நீக்கும் பொருட்டு ஹரியானா அரசு தண்ணீர் திறக்க கோரி ஆத்ஆத்மி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.இன்று அதிகாலை அவருக்கு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைந்தது. இதையடுத்து அவரது ஆரோக்கியம் பாதிப்பு அடைந்தது. அதனால் அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் உண்ணாவிரத போராட்டதை நிறைவு செய்தார். இதற்கு பதில் பார்லிமென்டில் டில்லியில் தண்ணீர் பிரச்னையை கிளப்ப முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்து உள்ளது.