முன்னாள் அமைச்சர் வீட்டு முன் ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் வீட்டு முன் ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 13, 2024 01:53 AM
புதுடில்லி:டில்லி அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ராஜ் குமார் ஆனந்த் வீட்டு முன், ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டில்லி சட்டசபைக்கு 2020ல் நடந்த தேர்தலில் படேல் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜ்குமார் ஆனந்த். டில்லி அரசின் சமூக நலத்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கும் அமைச்சராக இருந்தார்.
இவர், சமீபத்தில் தன் அமைச்சர் பதவி மற்றும்கட்சி உறுப்பினர் பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்தார்.
ஆம் ஆத்மி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும், தலித்துகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், படேல் நகரில் உள்ள ராஜ்குமார் ஆனந்த் வீட்டு முன், ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று திரண்டனர். ஓட்டுப்போட்ட தொகுதி மக்களை ராஜ்குமார் ஆனந்த் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி ஆனந்துக்கு எதிராக கோஷமிட்டனர்.
போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். பின், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

