யு.ஏ.இ. அபுதாபி பட்டத்து இளவரசர் 9-ம் தேதி இந்தியா வருகை
யு.ஏ.இ. அபுதாபி பட்டத்து இளவரசர் 9-ம் தேதி இந்தியா வருகை
ADDED : செப் 08, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இருநாள் அரசு முறைப்பயணமாக யு.ஏ.இ. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சையதுஅல் நஹ்யான் 9-ம் தேதி இந்தியா வருகிறார்.
வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சையதுஅல் நஹ்யான் இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை ஏற்று இரு நாள் பயணமாக வரும் 9-ம் தேதி ஷேக் முகமது பின் சையதுஅல் நஹ்யான் இந்தியா வருகிறார்.
இவரது வருகையின் போது, பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பரஸ்பரம் நட்புறவு , இஸ்ரேல்-ஹமாஸ் போர், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருந்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர்.
பின்னர் ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார். இவரது பயணத்திட்டம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.